25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 அகவை சிறுமி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத்தில் பல போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சார்ந்தோர் ஏராளமானோர் குஜராத்தில் தங்கி கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநில குஜராத்தி பேசும் மண்ணின் மக்கள், ஹிந்தி பேசும் அயல்மாநில மக்களை அடையாளம் கண்டு, இவர்களை பார்த்;து பார்த்து கடுமையாக தாக்கி வருவதால்;;;;, உயிர் பயத்தால், குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநில கூலித் தொழிலாளர்கள் அணிஅணியாக, கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன், பேருந்துகளிலும், தொடர் வண்டியிலும் தங்கள் சொந்த மாநிலத்தை நோக்கி பயணித்த வண்ணமுள்ளனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்புக்காக மாநில அரசு எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. எதிர்கட்சிகள் வெளிமாநிலக் கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக தலைமை அமைச்சர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில மக்களின் மீதான ஹிந்தித் தொழிலாளர்களின் திணிப்பை எதிர்ப்பதா? இந்திய தேசியத்திற்கு எதிரான குஜராத் மண்ணின் மக்களின் அயல்மாநிலக் கூலித் தொழிலாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்ப்பதா? நடுநிலையாளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.