Show all

ஆளுநர் பொறுப்பை தள்ளிவிட்டார் நடுவண் அரசிடம்! ஏழுபேர் விடுதலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த புரிதலோ முன்மாதிரியோ இன்மையால்

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில், உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. 

இந்தத் தீர்ப்பின் எதிரொலியாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமை  செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் நடுவண் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மீண்டும் ஏழுபேர்விடுதலைப் பந்து நடுவண் அரசின் கருத்துக்கு சென்றிருக்கிறது. கோல் விழுமா? கேட்ச் பிடித்து அவுட்டாக்குமா நடுவண் அரசு? மீண்டும் அறங்கூற்றுமன்றம் தலையிட்டு எழுவர் விடுதலையை மீட்டெடுக்குமா மோடிக்குதான் வெளிச்சம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.