Show all

கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத் தலமல்ல அனைவரும் வந்து பார்த்துச் செல்ல: ஆதித்யநாத்

கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத் தலமல்ல அனைவரும் வந்து பார்த்து செல்ல, என்று தெனாவட்டாக உத்திரபிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத்,

கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை ராகுல்காந்தி சந்திப்பது குறித்து விமர்சித்துள்ளார்.

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் சுமார் 71 குந்தைகள் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் உயிர்வளி உருளைகளுக்கு நிலுவை வைத்த நிலையில், அந்த நிறுவனம் உயிர்வளி உருளை பட்டுவாடா செய்யாததால்,

உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தணைத் தலைவர் ராகுல் காந்தி கோரக்பூர் வந்துள்ளார்.

டெல்லியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இளவரசருக்கு, தூய்மை விழிப்புணர்வின் முக்கியத்துவம் தெரியுமா? என்று ராகுல் பயணத்தை விமர்சித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், அதை எப்படி நாங்கள் அனுமதிப்போம். என்று பேசி இருப்பது,

மக்கள் நடுவே அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர் மற்றும் உபியின் கிழக்குப் பகுதி மக்களை காக்க பொறுப்பேற்று சவால் விடுபவர்கள், தாங்களாகவே முன் வந்து கொடிய நோய்களுக்கு ஆளாகி வரும் இந்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூய்மையான உத்தரபிரதேசம், சுகாதாரமான உத்தரபிரதேசம் என்பதே நான் முன்எடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.

முந்தைய அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாததே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறும்

ஆதித்யநாத் 5 முறை கோரக்பூர் நாடளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் யோகி ஆதித்யநாத் அரசின் மீது 71குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனையில் உயிர்வளி பற்றாக்குறையே காரணம் என்பதை மூடி மறைக்கப் பார்க்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.