Show all

50ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நீடிக்கும்: அமித்ஷா பகல்கனவு

பாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

மத்தியில் பெரும்பான்மை அரசு, மாநிலங்களில் 1,387 சட்டமன்ற உறுப்பனர்களுடன் பாஜக உச்சத்தில் இருந்தாலும் தொண்டர்கள் கட்சி இன்னும் சில தொலைவு செல்ல வேண்டும் என்று கருதுவதாக அமித் ஷா தெரிவித்தார்.

இன்று மத்தியில் 330 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மை, பல்வேறு மாநிலங்களில் 1387 சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜக உச்சத்தில் உள்ளது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்கள் இன்னும் சில தொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள்.

நாம் 5-10 ஆண்டுகளுக்காக ஆட்சி அமைக்கவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். 40-50 ஆண்டுகளில் ஆட்சியின் மூலம் நாட்டில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று உறுதிபூணுவோம்.

நம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, காம்ரூப் முதல் கட்ச் வரை நம் கட்சி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருப்பதை உறுதி செய்வோம் என்றார் அமித் ஷா.

மூன்று மாநிலங்களில் பாஜகவிற்கு ஆப்பு உறுதி ஆகிவிட்டது. செயலலிதா இருந்திருந்தால் தமிழகத்திலும் ஆப்பு உறுதியாகி யிருந்திருக்கும்.

ஆனாலும் தமிழகத்திலும் ஆப்பு உறுதிதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தப் படுவது உறுதியாகி விட்ட நிலையில் அமித்ஷா பகல் கனவு காண்பது வேடிக்கைதான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.