இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டன. இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட புதிய வங்கிகளிடம் புதிய கசோலைப் புத்தகம் மற்றும் கணக்குப் புத்தகம் இந்த மாதத்திற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும். 03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய ஆட்சியில் ஒரு முறை பதவி கிடைத்திட்ட பாஜக அரசு, இனி ஒருபோதும் ஒன்றிய ஆட்சியில் இருந்து இறங்கி விடக்கூடாது என்பதற்காக, ‘ஒற்றைத்துவம் ஆக்கல்’ என்ற தலைப்பின் கீழ், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மக்கள், ஒரே ஆதார், ஒரே சரக்குசேவை வரி, ஒரே கட்சி ஆட்சி என்பதற்காக சட்டத்தின் அனைத்து வாய்ப்புகளையும் முனைந்து பயன்படுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கல் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் குட்டி முதலாளிகளை கூலிக்காரர்கள் ஆக்கும் முயற்சியில் ஏதிர்பார்த்த வெற்றியை ஈட்டியது ஒன்றிய பாஜக. யார் இந்தியாவின் ஒற்றை முதலாளி என்ற தலைப்பில் ஆதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் வாய்ப்பளித்து களத்தில் அவர்கள் இருவர் மட்டும்; உலகின் மாபெரும் பணக்காரர் என்ற தலைப்பு வெல்ல ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையான, வங்கிகள் மீதான ஒற்றைத்துவம் ஆக்கல் முயற்சியில், ஒன்றிய நிதியமைச்சகமும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும் இணைந்து சிறு வங்கிகளைப் பெரு வங்கிகளுடன் இணைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டன. இதன் வாயிலாகத் தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களின் காசோலை மற்றும் கணக்குப் புத்தகம் 19,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: (01.04.2021) முதல் செல்லமாட்டா. இதன் மூலம் இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட புதிய வங்கிகளிடம் புதிய கசோலைப்; புத்தகம் மற்றும் கணக்குப் புத்தகம் வாங்கிக்கொள்ள வேண்டும். இதேபோல் இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி குறியீட்டு எண் மாற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 8 வங்கிகளில் ஒன்றில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், உங்கள் கணக்கிற்கு செல்பேசி எண், முகவரி, நாமினி பெயர் போன்றவற்றைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். இதனால் வாடிக்கையாளர்கள் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தவும், கணக்கில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்தவும் புதிய கணக்குப் புத்தகம் பெறுவது கட்டாயம். இதற்காக ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் இணைக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்குப் புதிய காசோலைப் புத்தகம் மற்றும் கணக்குப் புத்தகம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் பிற வங்கிகளும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.