26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று கருணாநிதி இறந்த ஒரு சில நாட்களிலேயே நாராயணசாமி அறிவித்தார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முதன்மையான சாலைகளுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளார். நாராயணசாமி தலைமையில் நேற்றிரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுவை அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. 27 விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவும், ஆலோசிக்கவும் பட்டது. அதில் முதன்மை அம்சமானது, முதன்மைச் சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து ஆகும். இதுகுறித்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி 100 அடி சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்கால்-திருநள்ளாறு இருவழிச் சாலை, பட்ட மேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதி பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



