Show all

தமிழில் பேசக் கூடாது: தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டம் நடைபெற்றது.

முதலில் பேசிய பிரதமர் மோடி, இந்திய விடுதலைக்குப் போரடிய வீரர்களை நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பித்துரை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது

தமிழக மக்கள் பலர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்றனர் என்று கூறினர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தம்பித்துரை தமிழில் பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பித்துரைக்கு எதிராக முழக்கமிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்திய அரசியல் சட்டப்படி தமிழ் உள்ளிட்ட 22 அட்டவணை மொழிகள் இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆகும். அதில் ஆங்கிலம் இந்தி இரண்டும் அட்டவணையில் மற்ற மொழிக்குச் சமமாக இடம் பெறும் மொழிகளே. இந்தியாவின் எந்த அரசு துறையிலும் தமிழைப் பயன் படுத்த முடியும்.

தமிழரைப் பார்த்து எழுச்சி பெற்ற கன்னடர்கள் கூட முயலலாம். அவர்களும் தமிழர்கள் தாய் மொழிக்காக முன்னெடுத்த முயற்சிகளில் பத்து விழுக்காடுதாம் முன்னெடுக்கிறார்கள். பெரும்பாலும் தமிழர் தாய் மொழி உணர்ச்சிளை கொச்சைப்படுத்துவதில்தாம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் தலைநகரை வட இந்தியாவில் அமைத்துக் கொண்டதாலும் அதன் பொருட்டே பெரும்பாலான நிருவாகப் பணிகளை வடவர்களே கைப்பற்றுவதாலும், நடுவண் அரசியலில் வடவர்களே முயல்வதாலும், 22 அட்டவணை மொழிகளை-

கூகுள் தேடு தளத்திலும், சமூக ஊடகங்களிலும் அனைத்து மொழிகளிலும் முயலமுடியும் முயல்கிறார்கள் பொதுமக்கள். அதைப் போலவே-

இந்தியாவின் அரசுதுறையின் அனைத்து தளத்திலும் முயல முடியும் என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை. நாம் நமது மொழியில் முயல்வது நமது அதிகாரம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தமது உடைமைகளை யெல்லாம் அயலவர்களிடம் ஒப்படைத்து விட்டு நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ கூலித்தளத்தில் இயங்கும் தமிழர்கள்

எடுத்துக் கொள்கிற அதிகாரங்களைக் கூட அடுத்தவர்கள் கொடுத்துப் பெறுகிற உரிமையாகவே கருதி போராடிக் கொண்டிருக்கிறார்கள்;.

அப்படியான ஒருவகை போராட்டம் தான் தம்பிதுரை முயன்றது. இந்தித் திணிப்பு எதிர்ப்;பு என்று போராடிக் கொண்டிருக்கிற நமக்கு,

தமிழ்அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான செயல் திட்டம் குறித்த சிந்தனையே இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.