Show all

வளரும் உலகம், தேயும் இந்தியா! இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத பெரும் சரிவு. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய்

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.

உலகச் சந்தையில் ஒரு டாலருக்கு விற்கிற எந்தப் பொருளையும், இந்தியப் பணம் ரூ70.82 கொடுத்து வாங்க வேண்டும் என்பதுதான் இந்தக் கதைக்கான விளக்கம்.

ஆசியாவில் சில ஏழையான நாடுகளும், இந்தியாவும்தாம் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்து வருகின்றன.

இந்த மாத தொடக்கத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு 70.80 ரூபாயை தொட்டது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்து, தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.82 ரூபாயை தொட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல்முறை இவ்வளவு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் விரைவில் பொருட்கள் இன்னும் விலை ஏற்றத்தை சந்திக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,895.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.