19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவராக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், பொன் மாணிக்கவேல்: தமிழக அரசு இதில் சரியாக செயல்படவில்லை என்றும், அதேபோல் தேசிய கட்சி ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், பகீர் குற்றச்சாட்டு வைத்தார். மேலும் அரசு தன்னை சரியாக பணி செய்ய விடுவதில்லை என்றும் அறங்கூற்றுமன்றத்தில் கூறினார். இவர் தேசிய புள்ளி என்று கூறியது யார் என்று எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சிலை கடத்தல் பிரச்சனை குறித்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது கீச்சுவில் நிச்சயமாக சிலைகள் திருடியது அல்லது துணை போனது யாராக இருந்தாலும் தூக்கில் போடனும். முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த தேசியக் கட்சி பிரமுகர் ஒருவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தத் தேசியகட்சி பாஜக அல்ல. விரைவில் உண்மை வெளிவரும். இதற்கான போராட்டம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார். அவரே தானாக வந்து இந்த சிலை திருட்டு சம்பந்தமாக கருத்து போட்டதால், இதை வைத்து பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருவது இணையம் முழுவதும் தீயாகப் பரவி வருகிறது. இப்படித்தான் ராஜிவ் கொலை செய்யப் பட்டவுடன் செய்தி வெளியாவதற்கு முன்னமேயே சுப்பரமணியசாமி விடுதலைபுலிகள் ராஜிவை கொன்று விட்டார்கள் என்று நேரில் பார்த்தவர் போல கூவிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக ஏழு அப்பாவிகள் கிடைத்தார்கள் உலக சதியை மூடி மறைப்பதற்கு என்று இன்று வரை திருச்சி வேலுச்சாமி அவர்கள், ஒரு நூலும் வெளியிட்டு, தகவல் தெரிவித்தும் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவது சரி என்பது போல, அந்த அப்பாவிகளை தண்டனை முடிந்தும் வெளிவிடவும் மறுக்கிறது அரசு. ராஜிவ் கொலையில் நடந்தது போல, இந்த சிலை கடத்தலிலும் நடந்து விடும் என்பதற்கு எச்.ராஜாவின் இந்தக் கூப்பாடு அமைந்து விடுமோ? உண்மைக் குற்றவாளிகள் காப்பற்றப் பட்டு விடுவார்களோ யென்று தமிழ் மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



