Show all

இயக்குநர் மிஷ்கின் அடுத்தப் படத்தின் கதைத் தலைவர் சந்தனு இல்லையாம்! அந்த வாய்ப்பில் உள்ளவர் உதயநிதியாம்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வித்தியாசமான கதைக் களங்கள், கதை பாத்திரங்கள் மூலம் தமிழ் திரைப் படத்தின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மிஷ்கின். 

இவர் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், நன்கு பேசப்பட்டதோடு வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. 

இயக்குனர் மிஷ்கின் அடுத்தபடியாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்றும் அறிவித்தார் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் திரைப்படம் கைவிடப்பட்டு, உதயநிதி தயாரித்து நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாந்தனு நடிக்கவிருந்த அதே படத்தில்தான் உதயநிதி நடிக்கிறாரா? அல்லது வேறு படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.