நடுவண் அரசை கண்டித்து, தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: நடுவண் அரசின், 500-1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், 10 நாட்களுக்கு மேலாக, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை. ஏழை மக்கள், வேலைகளுக்கு செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள நோட்டை மாற்ற, வங்கிகள் முன், வரிசையில் நிற்கிற கொடுமை குறையவில்லை. மற்ற மாநில முதல்வர்கள், இந்த பிரச்னைக்காக நடுவண் அரசை எதிர்த்து, கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடுவண், மாநில அரசுகளை கண்டித்து, 24ம் தேதி மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, மாவட்ட தலைநகரங்களில், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



