19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைநாளை முன்னிட்டு சீன செல்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ பிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை வரும் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக் கிழமை வரை விவோவின் பிரத்யேக ஈ காமெர்ஸ் தளத்தில் நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடி, தள்ளுபடிதாள்கள், திரும்பும்;பணம்; சலுகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவோ மிடுக்குப்பேசிகள், பிற துணைக் கருவிகள் மீது பெறலாம். இவற்றுள் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ், விவோ ஏ9 கைப்பேசிகளும் அடங்கும். இதைத் தவிரவும் பல்வேறு சலுகைகள் இந்த நாட்களில் தரப்படவுள்ளன. இந்த விற்பனையின் சிறப்பு அம்சம் விவோ நெக்ஸ் மற்றும் விவோ ஏ9 கைப்பேசிகள் ரூ.1947க்கும், காதொலிக் கருவிகள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. இந்த விற்;பனை மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி கையிருப்பு உள்ளவரைத் தொடருமாம். இந்த மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாதிரிகளில் ரூ.4000 வரை திருப்பும்பணம் பெறலாம். இதைத்தவிர்த்து, எல்லா விவோ மிடுக்குப்பேசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ ஏ9 மற்றும் விவோ ஓ21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் காதொலிக் கருவிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இந்தச் சிறப்பு விற்பனையின்போது பல தள்ளுபடி தாள்களையும் வழங்கப்படவுள்ளன. கேபிள்கள் மற்றும் காதொலிக் கருவிகள் வாங்குபவர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள தள்ளுபடிதாள்களும் உயர் ரக காதொலிக்கருவிகளுடன் ரூ.200 மதிப்புள்ள தள்ளுபடிதாள்களும், விவோ ஏ7 பேசிகளுடன் முறையே ரூ.2000 மற்றும் ரூ.3000த்திற்கான தள்ளுபடிதாள்களும் வழங்கப்படவுள்ளன. இத் தள்ளுபடிதாள்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மிடுக்குப்பேசிகள் மற்றும் உபரி பாகங்களை வாங்கலாம். இந்த விற்பனை திங்கட் கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. இதை குறித்து விவோ இந்தியாவின் தலைவர் ஜெரோமி சென், விவோ அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களுடைய எழுபத்து இரண்டாவது விடுதலை நாளைச் சிறப்பானதாக்க எண்ணியது. இந்த பிரீடம் கார்னிவல் புத்தம் புதிய மிடுக்குப்பேசிகளுக்கு பல சலுகைகள் மூலம் அனைத்து இந்தியர்களும் விவோ பொருட்களின் வழியாகத் தங்களை தனித்துவமாக வெளிப்படுத்திக்கொள்ளவும் கொண்டாடவும் முடியும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



