Show all

வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம்! இன்றைய மருத்துவர்களுக்கு சுகப்பிரசவம் பார்க்கவே தெரியாதோ என்கிற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டு விட்டது

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட்டுக்கு தனிப்பயிற்சி யெல்லாம் எடுத்து, பணம் செலவு செய்து படித்தோம் சம்பாதிக்கிறோம் என்று, ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் சம்பாதிக்கிறோம் என்று அரசியல்வாதிகள் தெனாவெட்டு போல மருத்துவமும் தெனாவெட்டாகி விட்டது. சுகப்பிரசவம் என்பதே அரிதாகிப் போனதால், இன்றைய மருத்துவர்களுக்கு சுகப் பிரசவம் பார்க்கவே தெரியாதோ என்கிற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் சுகப்;பிரசவம் மரபு வழியாக என்று பொது மக்கள் கிளம்பி விட்டார்கள்.

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் மனைவி மகாலெட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.45 மணிக்கு தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இவர்களுக்குப் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல், அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குநர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவும் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதைக் கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுகூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே. சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்தப் பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாகக் கூறி விரட்டுகிறார் என்கின்றனர் மருத்துவக் குழுவினர்.

மருத்துவர்கள் சொல்வதுபோல, அடிப்படையான பரிசோதனைகள் மட்டும் செய்யலாமே, அதுவும் வீட்டிலேயே பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்டபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் தானே, என் மனைவியும், குழந்தையும் ஆரோக்கியமாகதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்குப் பரிசோதனை? என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தாய், சேய் இருவரையும் பரிசோதிக்க அனுமதி கேட்டு, கண்ணனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.