Show all

கிராமப்புற மாணவர்கள் மீதான கரிசனம்!

நீ அவல் (தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்) கொண்டுவா! நான் உமி (நீட்) கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி அவலை தின்று மகிழலாம் என்கிற ஒன்றிய பாஜக அரசின் அடாவடி நீட் தேர்வில் இப்படியொரு கரிசனம்.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: நீ அவல் (தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்) கொண்டுவா! நான் உமி (நீட்) கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி அவலை தின்று மகிழலாம் என்கிற ஒன்றிய பாஜக அரசின் அடாவடி நீட் தேர்வு நாளது 27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (12.09.2021) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இயங்கலை விண்ணப்ப பதிவு பத்து நாட்களுக்கு முன்பே தொடங்கியது. இன்னும் இரண்டு கிழமைகள் நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வெயநெநவ.niஉ.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் கிராமப்புற மாணவர்கள் தவறு செய்வது அவர்களுக்கு புரிந்து விட்டதாம். கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.