இந்திய ராணுவத்தில்
பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வின் வினாத்தாள் மும்பையில் வெளியானதை தொடர்ந்து,
காம்டீ, நாக்பூர், அகமத் நகர், அகமதாபாத், கோவா மற்றும் கிர்கீ உள்ளிட்ட மையங்களில் நடைப்பெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடுவண்
அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள தானே பகுதியில் உள்ள தேர்வு பயிற்சி மையத்தில் பணத்தை பெற்றுக்
கொண்டு வினாத்தாளை வெளியிட்டுவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக
மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை, 18 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



