Show all

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா: உச்சஅறங்கூற்றுமன்றம்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா: உச்;சஅறங்கூற்றுமன்றம்

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடாகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்று நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்று மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்சஅறங்கூற்று மன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசின் வாதம் தொடங்கி நடந்து வந்தது. இரண்டு அரசுகளின் வாதமும் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் இறுதி வாதம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

அறங்கூற்றுவர்கள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்,

‘காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது என்ற ஒரே காரணத்துக்காக அம்மாநிலம் காவிரியின் மீது முழு உரிமை கொண்டாட முடியாது. கர்நாடகாவின் அணுகுமுறை காரணமாக தமிழகத்தின் இருபோக விளைச்சல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி விட்டது. அத்துடன் நீர் திறந்து விடாத காரணத்தினால் தமிழகத்தின் விவசாய பரப்பு என்பதும் குறைந்து விட்டது. என்று இன்று தமிழக அரசின் வாதம் முன்வைக்கப்பட்டது.

வாதத்தின் பொழுது அறங்கூற்றுவர்கள்,

நடுவண் அரசு-

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீப்பினை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனையும் தெரிவிக்குமாறு அவர்கள் கோரினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.