Show all

ரூ.1,999க்கு குறைந்த விலை மிதிவண்டி! விரைவில் சந்தைப்படுத்தவுள்ளதாம் ஹிரோ நிறுவனம்

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உடல் நலத்திற்காக மிதிவண்டி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ மதிவண்டி நிறுவனம் இந்தியாவின் மிகக் குறைந்த விலை மிதிவண்டியினை 1,999 ரூபாய்க்கு விற்கத் தயாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

அன்றாடம் வேலைக்குச் செல்வதற்காக மிதிவண்டியினைப் பயன்படுத்த விரும்புபவர்கள் இந்த அப்கிரேடட் ரோட்ஸ்டர் மாடல் மதிவண்டியினை வாங்கிப் பயன்படுத்துவார்கள் என்று ஹீரோ நிறுவனம் எதிர்பார்க்கிறது. புதிய ரோட்ஸ்டர் மாடல் மதிவண்டி பழைய மிதிவண்டியைப் போன்று இல்லாமல் புதிய வடிவத்தில் இருக்கும் என்றும் இதற்கான பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருவதாகவும் ஹீரோ மிதிவண்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்துள்ளார் 

சென்ற மாதம் பங்கஜ் முஞ்சால் அடிப்படை ஹீரோ மிதிவண்டிகளின் விலையினை 500 ரூபாய் வரை குறைப்பதாகத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விலை குறைவு என்பதற்காகத் தரத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.