Show all

25ஆயிரம் 30ஆயிரம் என்று மானியத்துடன் கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு! 23 ஆயிரம் 32.5 ஆயிரம் என்று அபராதம் வசூலிக்கிறது பாஜக அரசு.

இந்திராகாந்தி சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25ஆயிரம் 30ஆயிரம் என்று மானியத்துடன் கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு! பல்லாயிரக் கணக்கில் தொழில் அதிபர்கள் உருவானார்கள்.  23 ஆயிரம் 32.5 ஆயிரம் என்று அபராதம் வசூலிக்கிறது பாஜக அரசு! என்ன ஆகும்?

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆட்டோவுக்கு 32 ஆயிரம், பைக்குக்கு 23 ஆயிரம், வண்டியை விற்றுதான் அபராதம் செலுத்தனும்; மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள். குண்டும் குழியுமான சாலைகள். யார் அபராதம் போடுவது என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். சாலை விதிகள் என்பவை சமுதாயத்திற்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய கல்வி. இதற்காக அரசு நிறைய மெனக் கெட வேண்டும். அபராதம் விதித்து, குற்றஅறிக்கை அளித்து, மக்களை அறங்கூற்று மன்றத்திற்கு அலையவிடக் கூடாது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, முன்பைவிட, 10 மடங்கு வரை அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை தவிர்த்து, (ஏன் எடப்பாடி விட்டுக் கெடுத்தார் தமிழகத்தை என்று தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது அதிமுகவின் மீது.) இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். 

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஒன்றில் இன்று நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது, ஆட்டோ ஓட்டுனரிடம் வண்டி பதிவுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், மாசு சான்றிதழ், காப்பீடு இல்லை என்பதாக, இதற்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, 32 ஆயிரத்து 500 ரூபாய். 

ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு இது எவ்வளவு பெரிய அபராதம் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. 

நேற்று, குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாக அபராதங்களை விதித்தனர். அவருக்கு மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இப்போதைய சந்தை மதிப்பில் அவர் ஸ்கூட்டியின் மதிப்பே ரூ.15 ஆயிரம் தான். 

லஞ்சம் வாங்கும் சில காவல்துறையினர் இந்த அதிகபட்ச அபராத தொகையை சொல்லி, மிரட்டியே, தங்கள் சட்டைப்பையை நிரப்பும் வாய்ப்பும் உள்ளதை மறுக்க முடியாதுதானே!

தொழில் வாய்ப்பை பெருக்குவதற்காக, இந்திராகாந்தி சுயவேலை வாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் குறைந்த பட்சம் 25000 முதல் 30விழுக்காடு மானியத்துடன் எந்த விதமான பிணையும் இல்லாமல் இந்தியா முழுவதும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் பல்லாயிரம் தொழில் அதிபர்கள் உருவானார்கள். மோடியின் பணமதிப்பழிப்பு கூட அந்தத் தொழில் அதிபர்களின் வயிற்றில் அடிக்கத்தான் பெரும்பாலும் பயன்பட்டது.

வட இந்திய மக்கள் ஐந்து ஆண்டுகள் அல்லல்பட்டும் கூட எப்படி மீண்டும் பாஜகவிற்கு வாக்களித்திருக்க முடியும்? இதில் ஏதாவது வேறு உள்குத்து இருக்கிறதா? என்கிற கேள்வி மிகப்பெரும்பாலான தமிழ் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,265.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.