Show all

குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாஜக லீலைகள்

இம்மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களக்கு பல்வேறு கோணங்களில் பாஜக வலை விரிக்கும் நிலையில் பீதியடைந்த காங்கிரஸ் கட்சி, கட்சி தாவுவதை தடுக்க 44 சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்று திரட்டி பெங்களூருவுக்கு அனுப்பியது. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ‘ஈகிள்டன்என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி.கே. சிவக்குமார் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ச்சியாக சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் பழிவாங்கும் வருமான வரித்துறையின் சோதனை கர்நாடக காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை சோதனையில் கிடைக்கப்பெற்றவைகள்; தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.