Show all

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலைச் சந்திக்க பிரதமர் மோடி தயாரா: மாயாவதி

ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, அவரே நடத்திக்கொண்ட கருத்து கணிப்பில், ஐந்து லட்சம் பேரில், 93 விழுக்காட்டு பேர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அடாவடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, புதிதாக தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.