16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய அழகியாக பட்டம் வென்ற அனுகிருத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த நான், இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப் போட்டிக்குத் தயாராகிவருகிறேன். அதை நோக்கி கவனம் செலுத்திவருகிறேன். உலக அழகி பட்டம் பெறுவதே எனது கனவு; உலக அழகி பட்டம் பெற்ற பின், என் படிப்பை மீண்டும் தொடர்வேன். என் தாயார் எனக்கு சுதந்திரம் கொடுத்ததால்தான் என்னால் இந்த இடத்துக்கு வரமுடிந்தது. கட்டுப்பாடுகளை விதித்திருந்தால், நிச்சயம் என்னால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. என் தாய்க்கு நன்றி. என்று தெரிவித்தார். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். தமிழ் இலக்கியம் போல வேறு எந்த மொழியிலும் இல்லை. என்று தான் ஒரு தமிழ்ப்பெண் என்கிற பெருமிதத்தை வெளிப்படுத்தினார். உலக அழகி பட்டம் பெற்றவர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



