Show all

இந்தியாவின் முதல் பட்டுவாடா வங்கிச் சேவையை ஏர்டெல் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஏர்டெல் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்களுக்குப் பணப்பட்டுவாடா வங்கிச் சேவையைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது, வாலட் மற்றும் ஏர்டெல் மணி சேவைகளை வழங்கிவருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது பணப்பட்டுவாடா வங்கிச் சேவையிலும் ஏர்டெல் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஏர்டெல் வணிகமையங்களிலும் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்த ஏர்டெல் வணிகமையங்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும். இவற்றின் மூலம் அடிப்படை மற்றும் எளிமையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ஏர்டெல் வணிகமையங்களிலும், ஏர்டெல் பணப்பட்டுவாடா வங்கி சேவையை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் செல்பேசி எண்ணையே வங்கி கணக்காக பயன்படுத்துவது இந்த சேவையின் தனி சிறப்பம்சம். புள்ளிமை முறையில் இந்த சேவை செயல்படும். ஏர்டெல் பணப்பட்டுவாடா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும். சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.