Show all

2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலி

நடப்பு, 2016ம் ஆண்டில் இதுவரை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள், 86 பேர் பலியாகியுள்ளனர். 2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலியாகியுள்ளனர். ஆய்வு ஒன்றின் தகவல்படி இந்த ஆண்டில், கடந்த கிழமை வரை, 84 வீரர்கள் பலியாகி உள்ளனர். நேற்று, காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் பலியானார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ராணுவத்தினர், பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த ஆண்டு இறந்த, 87 வீரர்களில், 71 வீரர்கள் காஷ்மீரில் பலியானார்கள். யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியானர்கள். இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த, 2008 ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதலில், 90 பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர். 2009ம் ஆண்டில் 78 வீரர்கள் பலியான நிலையில், 2012 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் பலி 17 ஆக குறைந்தது. 2013ல் இது அதிகரித்து 61 வீரர்களாகவும், 2014ல் வீரர்கள் 51 வீரர்கள் பலியானார்கள். 2015ல் 41 வீரர்கள் பலியானார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.