02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டபோதிலும் ஹிந்துத்துவா அமைப்புகள் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல கூடாது என மிரட்டி வருகின்றன. ஆனால் உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை அமல்படுத்த உறுதியாக உள்ள கேரள அரசு ஐயப்பனை வழிபட வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளர் கவிதா என்பவர் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து நேற்று ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பயணம் செய்தார். அவருக்கு 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். காவல்துறை பாதுகாப்புடன் ஐயப்பன் சன்னிதானம் நோக்கி சென்ற கவிதா பயபக்தியுடன் வழிபாடு செய்தார். கவிதாவுடன் இன்னொரு பெண்ணும் உடன்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 26 அகவை கவிதா, ஐயப்பனை தரிசித்த பின்னர் தான் மிகவும் மனநிறைவுடன் இருப்பதாக தெரிவித்ததார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,945.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



