14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை கீச்சுவில் வெளியிட்டு இதன்மூலம் தனது விவரங்களை யாரேனும் திருட முடியுமா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்று இணையத்தள ஹேக்கர்கள், சர்மாவின் தனிப்பட்ட விபரங்கள் பலவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆதார் ஆணையம், சர்மாவின் தனிப்பட்ட தகவல்கள் ஆதார் மூலம் எடுக்கப்படவில்லை என்றும், வருமானவரி கணக்கு எண், செல்பேசி எண் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் ஆதார் மூலம் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்தி சர்மாவின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை ஹேக்கர்கள் செலுத்தி அந்த ஒப்புகைச் சீட்டையும் கீச்சுவில் வெளியிட்டுள்ளனர். ஒருவருடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர் கணக்கில் பெருந்தொகையைப் போட்டுவிட்டு நிதிமோசடி குற்றச்சாட்டைச் சுமத்தவும் முடியும் என்றும் சர்மாவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



