எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மிகவும் பேரறிமுகமாக இருக்கும், அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ‘வணிகத் தடை’ கட்டுப்பாட்டை விதித்துள்ளது. வங்கியின் நிர்வாகத்தில் நிலவி வந்த குளறுபடிகள், சிக்கல்கள் காரணமாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எல்லா வங்கிகளைப் போலவே வாராக்கடன் சிக்கலில் தவித்து வந்த லட்சுமி விலாஸ் வங்கியை கைமாற்ற அதன் இயக்குனர்கள் கடந்த ஒரு ஆண்டாகவே முயன்று வந்தனர். இந்த நிலையில்தான் இந்த வங்கிக்கு சட்டத்தில் மாரட்டோரியம் என்று சொல்லப்படுகிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மார்கழி முதல்நாள் வரை (டிசம்பர் 16) மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இந்த வங்கியை டிபிஎஸ் வங்கி வாங்க உள்ளது. இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி மற்றும் இந்திய பங்கு மற்றம் பரிவர்த்தனை வாரியம் (செபி) நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் சிக்கலுக்கு உள்ளாகும் மூன்றாவது பெரிய வங்கி லட்சுமி விலாஸ் வங்கி ஆகும். கடந்த ஆண்டில் இதேபோல் பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அந்த வங்கியின் நிதி மோசடி புகார் என்பதாகத் தெரிவித்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அதிரடியாக செயல்பட்டு இதில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் புதிய கடன் கொடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பின் அது 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மும்பை, பஞ்சாப் பகுதிகளில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இதனால் கடுமையாக அவதிப்பட்டனர். சிலர் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் பலியான சோகமும் கூட நடந்தது. பஞ்சாப் மற்றும் மும்பை வங்கியை போலவே எஸ்வங்கியும் இதேபோல் சிக்கலில் மாட்டியது. வாராக்கடன் அதிகரித்ததால் நிதிச் சுமை ஏற்பட்டு, தனியார் வங்கியான எஸ்வங்கி சிக்கலில் மாட்டி தவித்து வந்தது. இந்த நிலையில் அந்த வங்கியை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நிர்வாக பணிகளை கண்காணித்தது. அதேபோல் எஸ் வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இதேபோன்ற கட்டுப்பாடு லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ளது. எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கிச் சிக்கல் என்றாலே அதற்கு அடிப்படை வாராக்கடன்தான். பெரிய வங்கிகளின் வாராக் கடன் குறித்து பேசும் போது, நிருவாகக் குளறுபடிகள் என்று வங்கி அதிகாரிகள் மீதும், நிரவ் மோடி போல திருப்பியளிக்காமல் நாட்டை விட்டு ஓடிய பெரும் பணக்காரர்கள் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த வங்கிகள் பாட்டில்- வாராக்கடனுக்கு பெரிய பணக்காரர்களை குற்றப்படுத்த வாய்ப்பு இல்லாமல், முழுக்குற்றச்சாட்டும் வங்கி அதிகாரிகளின் நிருவாக கோளாறுகள்; என்பதாக முடித்துக் கொள்ளப்படுகிறது. உண்மையில் அடிப்படையான காரணம்: கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிற பாஜகவில்- முறையான நிருவாகம், ஆட்சி அதிகாரத்திற்கு ஆளும் வகைக்கு உரிய அறிவாளர்கள் இல்லை என்பதே முதன்மைக் காரணம் ஆகும். அதற்கும் மோலாக- முறையான நிருவாகம், ஆட்சி அதிகாரத்திற்கு ஆலோசனை கூறும் அறிவாளர்கள் யாரையும் மதிக்க மறுக்கிறது பாஜக. அவர்களை தங்கள் ஆட்சியை கவிழ்த்து விட முயலும் சூழ்ச்சிக்காரர்களைப் போல் நடத்துகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய கட்டுப்பாட்டு வங்கியிடம் இருக்கிற உபரி நிதியை கூடுதலாக அரசு கைப்பற்றியது, தொழில் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் இல்லாமல் சரக்கு சேவைவரி விதிப்பு, எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய ஆட்சியில் குவித்து மாநில நிருவாகத்தை, மாநில அறிவாளர்களை புறந்தள்ளுவது என்று ஏராளமான தவறுகளை தொடர்ந்து ஒன்றிய ஆட்சி கிடைக்க பெற்ற பாஜக அரசு தப்பு தப்பாக முன்னெடுப்பதே காரணம் ஆகும். பாஜக ஆட்சி தொடர தொடர இந்தியாப் பொருளாதாரம் இன்னும் அதளபாதளத்திற்கு செல்லுவதை யாராலும் தடுக்க முடியாது. சமூக செயல்பாட்டார்கள் மீதான அச்சுறுத்தல் தொடருகிறது. இதனால் பெரு ஊடகங்கள் நமக்கென்ன என்று அய்வுக்களம், தலையங்கம் என்பவைகளை யெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டன. அரசு எந்திரங்கள் அனைத்தும் பாஜக அரசு சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாக இருக்கப் பழகி வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



