Show all

நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை! தேன்மொழி அசத்தல்

தேன்மொழி பிஏ. ஊராட்சி மன்றத் தலைவர் தொடர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கதைத்தலைவியை முதன்மைப்படுத்தும் குடும்பப் பாங்கான தொடராகும். இன்றைய தொடரில் கதைத்தலைவியின், ‘கற்பை நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை’ என்ற வசனம் சில மணித் துளிகளிலேயே இணையத்தில் வெளியிடப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தேன்மொழி பிஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற தொடர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது கதைத்தலைவியை முதன்மைப்படுத்தும் குடும்பப் பாங்கான தொடராகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி முடிய ஒவ்வொரு நாளும் இரவு 10.30க்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்றைய தொடரில் கதைத்தலைவின், ‘கற்பை நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை’ என்று பேசிய வசனம் சில மணித் துளிகளிலேயே இணையத்தில் வெளியிடப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

கோலமாவு கோகிலாவில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த நடிகை ஜாக்குலின் தான் தேன்மொழி பிஏ. ஊராட்சி மன்றத் தலைவர் தொடரின் கதைத்தலைவி. தேன்மொழியின் தங்கை தமிழ், கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு விண்ணப்பம் நிரப்பித்தரும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

கோயில் நகைகளை திருடி, தேன்மொழியின் தங்கை தமிழால் கண்டுபிடித்து மட்டிக் கொண்ட பழனிச்சாமி, தமிழை அசிங்கப்படுத்த சத்துணவு கூடத்திற்கு தமிழையும், கிராம நிருவாக அலுவலரையும் போலி அழைப்பின் மூலம் வரவைத்து, அவர்கள் உள்ளே இருக்கும் போது, வெளிக்கதவைப் பூட்டி விட்டு ஊர்மக்களை அழைத்து வந்து இருவரையும் இணைத்துப் பேசி அசிங்கப்படுத்த முயல்கிறார். 

ஆனால் கிராம நிருவாக அலுவலர் செல்பேசியில் எல்லா அழைப்புகளும் இயல்பாக பதிவு செய்து கொள்ளும் வகைக்கு செல்பேசியை அமைத்துக் கொண்டிருப்பதால்,  தனக்கு வந்த போலி அழைப்பை எளிதாக பொது மக்களுக்கு போட்டுக் காட்டி தங்கள் ஏமாற்றப்பட்டதை நிரூபித்து விடுகிறார்.

இந்த நிலையில் தமிழின் அப்பா தமிழை வேலைக்கு செல்லவேண்டாம் என்று சொல்லிவிட, இயல்பாக பெண்களுக்கு இருக்க வேண்டிய துணிச்சல் குறித்து தேன்மொழி அப்பாவுக்கு தெளிவு படுத்தி தமிழை மீண்டும் வேலைக்குசொல்ல ஒப்புதல் கொடுத்து விடுகிறார். 

மேலும், தன் தங்கை தமிழை அவமானப் படுத்த முயன்ற பழனிச்சாமி வீட்டுக்குத் தேன்மொழி செல்கிறார். அங்கே பழனிச்சாமிக்கு இரண்டு அடியாட்கள் தோளைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே அறையில் இருந்த பூச்சாடி உள்ளிட்ட பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கிறார். மேலும் தனிஆளாக பழனிச்சாமிக்கு தன்னோடும் தன் குடும்பத்தாரோடும் மோதினால் என்ன ஆகும் என்று தெளிவு படுத்தி எச்சரிக்கை விடுகிறார். 

இந்த இடத்தில்தான், “நீ களங்கம் சொல்லிவிட்டால் தீக்குளித்து நிரூபிக்க வேண்டுமா? தீக்குளிக்க மாட்டோம் எரித்து விடுவோம். இது மதுரை” என்று அவர் அறைகூவல் விட்டு, வடக்குவரை தெறிக்க விடுகிறார். இந்த வசனம் பேசிய சிலமணித்துளிகளிலேயே இணையத்தில் பாராட்டு பெறத் தொடங்கி விட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.