04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இது குறித்த காணொளிக்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்தனை பிரச்சனையும் ஒரே ஒரு சுவிட்ச் சரியாக வேலை செய்யாத காரணத்தால் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் விமானிகள் அறையில் இருக்கும் அழுத்த கட்டுப்பாடு சுவிட்சை போட்டு இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை நிகழ்ந்து இருக்காது என்று கூறப்படுகிறது. இதை போடாததால் உள்ளுக்கு உள்ள அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மக்களுக்கு அதிக அழுத்தம் காரணமாக ரத்தம் வந்துள்ளது. இந்த நிலையில் உள்ளே நடந்த விசயம் அத்தனையும் காணொளிவாக பதிவாகி உள்ளது. அங்கு உள்ளே இருந்த பயணி ஒருவர் இந்த காணொளிவை படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார். இந்தக் காணொளி இணையம் முழுக்க பரவி வருகிறது. இந்தக் காணொளிவில் பயணிகள் எல்லோரும் உயிர்வளி முகமூடி மாட்டி இருக்கிறார்கள். உள்ளே உயிர்வளி அளவு வேகமாக குறைந்த காரணத்தால் இந்த முகமூடி மாட்டி இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 30 பேருக்கு காது, மூக்குகளில் ரத்தம் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ரத்தம் அதிகமாக வந்தது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும்தான் என்று கூறப்படுகிறது. சிறுவர்களுக்கு சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு ரத்தம் வந்ததை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஜெட் ஏர்வேஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



