Show all

2ஜி அலைவரிசை வழக்கின் தீர்ப்பு நாள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

செல்பேசி நிறுவனங்கள் ஒரு ஜிபி இணையப் பயன் பாட்டை குறைந்தது 200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தன. ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு வானளாவ விலைக் குறைப்பு செய்தார்கள். இன்றைக்கு அனைத்து செல்பேசி நிறுவனங்களும் விலை குறைக்கத் தொடங்கி விட்டன.

முந்தைய விலைப் படி ஒருநபர் ஆண்டு ஒன்றுக்கு 73,000 செலவிட்டிருப்பார். இன்றைய நிலவரப் படி ஆண்டு ஒன்றுக்கு 1,000 கூட செலவாதில்லை.

கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு நபரிடமும் செல்பேசி நிறுவனங்கள் 72,000 அளவிற்கு முறைகேடு செய்துள்ளன. என்று நாம் கற்பித்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடரமுடியும்; ஆனால் நிற்காது.

இது போன்றதொரு வழக்குதான், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடுகள் என்பதாகும்.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு கற்பிக்கப் பட்டது. இந்த வழக்கை, இந்தியப் புலனாய்வுத்துறை விசாரித்தது.

இது திமுகவை- காங்கிரஸ் தன் கூட்டணியில் தொடர்ந்து அடிமையாக வைத்துக் கொள்வதற்கான கற்பிதவழக்குதாம். இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் இருந்தாக வேண்டும்.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, இந்தியப் புலனாய்வுத்துறை தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், அறங்கூற்றுவர் ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு அறங்கூற்றுமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தியப் புலனாய்வுத்துறை தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

மேலும், ராஜாவின் முன்னாள் தனிச்செயலர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் கட்டுமான நிறுவன தலைவர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக, 2011ல், இந்தியப் புலனாய்வுத்துறை முதல் குற்றப் பத்திரிகையை பதிகை செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று(செப்.,20) தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

தண்டனைத் தீர்ப்பாக அமையுமேயானால், மோடிஅரசு திமுகவைஅடிமைப்படுத்தலில் காங்கிரசோடு தன்னை இணைத்துக் கொண்டது என இதைக் கருதலாம்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.