05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.15இலட்சம் போடும் மக்கள் மனதில் ஆசை கிளப்பும் மாய்மாலத்தை மீண்டும் தொடங்கி விட்டது பாஜக. இந்தக் கட்சி மட்டுந்தானே இவ்வளவு உயர்ந்த வாக்குறுதியைத் தருகிறது. கொடுக்கா விட்டால் பரவாயில்லை; ஒரு வேளை கொடுத்தால், ஆகா எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு மகிழ்ச்சி ரூ.15இலட்சம் ஆயிற்றே என்று மக்கள் கிடந்து அலைமோதத் தொடங்கி விட்டார்கள். பாஜக ஐந்தாண்டுகளாக செய்த கொடுமையெல்லாம் மக்கள் மறக்கத் தயாராகி விட்டார்களா? அறிஞர் பெருமக்கள் குழம்பத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய், வைப்பு செய்யப்பட்டால் நல்லது தான், என, மக்கள் நீதி மைய தலைவர், கமல்ஹாசன் அவர்களைப் பேச வைத்து விட்டன. சென்னை விமான நிலையத்தில், கமல் அளித்த பேட்டி: 'ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும், படிப்படியாக, 15 லட்சம் ரூபாய், வைப்பு செய்யப்படும் என, நடுவண் இணையமைச்சர், ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் நல்லது தான்.' இவ்வாறு அவர் கூறினார். தயவு செய்து ஊடகங்களும், அறிஞர் பெருமக்களும், மக்கள் மனதில் ஆசை கிளப்பும் பாஜகவின் மாய்மாலத்திற்கு சோரம் போகாதீர்கள். இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், 99 விழுக்காடு மக்கள் கொத்தடிமைகளாகவும், ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டும் அம்பானி போன்ற பணக்காரர்களாகவும், தமிழிசை, எச்.இராஜா உள்ளிட்ட பாஜக ஆட்சியாளர்களாகவும் இருப்பார்கள் கவனம்! கவனம்1 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



