Show all

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை அ.தி.மு.கவிலிருந்து நீக்கினர்! ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தே

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜா அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பதவியேற்று சில மணி நேரங்களே ஆகியிருந்தநிலையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டார். அந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. அவரும், அ.தி.மு.கவிலும் உறுப்பினராக இருந்துவருகிறது. அவர் மீது ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் கைலாசநாதர் பட்டியிலுள்ள கோயில் பூசாரி நாகமுத்துவின் தற்கொலையில் ஓ.ராஜாவின் பெயர்தான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியிடுவதற்கு ஓ.ராஜா வேட்புமனுத் பதிகை செய்தார். அதனையடுத்து, அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்கராஜன், கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்று உயர் அறங்கூற்றுமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதனையடுத்து, தேர்தல் நடைபெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பிலும் சமாதானம் ஏற்பட்டது. உடனடியாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தல் நடந்தது. கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவும், சட்டமன்றஉறுப்பினர் ராஜன் செல்லப்பாவும் கலந்துகொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.