நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவில், தொடரும் பாஜக ஆட்சியில், அதானியும் அம்பானியும் மட்டுமே பணக்காரர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். 29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிரண்டு பணக்காரர்கள் வளர்ச்சி கொண்டாடப்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். ஆனால் நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில். ஆனால் நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவில், தொடரும் பாஜக ஆட்சியில், அதானியும் அம்பானியும் மட்டுமே பணக்காரர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டே இரண்டு தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் ஏவுகணை வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் வேறு எந்தப் பெரும் தொழிலதிபர்கள் போல் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 16.2 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டு வரும் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோரை விடவும் நம்ம நாட்டுக் கௌதம் அதானி அதிகப் பணத்தை இந்த ஆண்டுச் சம்பாதித்து உள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி கௌதம் அதானி இந்த ஆண்டு உலகப் பணக்காரர்களை விட அதிகமாகச் சம்பாதித்துள்ளார் எனத் தெரியவருகிறது. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 16.2 பில்லியன் டாலர் அதிகரித்து 50 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது. இதன் மூலம் நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவின் பணக்காரர் பட்டியலிலும் கௌதம் அதானி இந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளார். கௌதம் ஆதானியின் நிறுவனப் பங்குகளின் மதிப்புக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக அதானி டோட்டல் 96விழுக்காடு, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90விழுக்காடு, அதானி டிரான்ஸ்மிஷன் 79விழுக்காடு, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52விழுக்காடு அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. கௌதம் அதானி கடந்த சில மாதங்களாகத் தனது நிறுவனத்தின் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் துறைமுகம், விமான நிலையம், தரவுகள் மையம், நிலக்கரி சுரங்கம் ஆகிய துறையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி வருகிறார். இது மட்டும் அல்லாமல் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் டோட்டல் எஸ்ஏ முதல் வார்பர்க் பின்கஸ் நிறுவனங்கள் வரை பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டைத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உங்கள் சேமிப்பு தங்கத்திலா? அஞ்சலகத்திலா? வங்கி வைப்பா? அல்லது கையிலே காசே இல்லைங்க என்கிற அவலத்தில் இருக்கின்றீர்களா? என்ற வினாவிற்கு 56 விழுக்காட்டினர் கையிலே காசே இல்லைங்க என்கிற அவலத்தில் இருப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.