Show all

தமிழக அரசு அறிவிப்பு: கொரோனா ஊரடங்கு நிவாரணம் ரூ1000! திரைப்பட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்று நடிகர் சங்க தனி அலுவலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சங்க உறுப்பினர்கள் கீழ்க்காணும் ஆவணங்களை இன்று மாலைக்குள் ளெஉவ2015;பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப இயலாதவர்கள் 98656 03660, 98417 65110 ஆகிய எண்ணிற்குப் நிழற்பட நகல் எடுத்து புலனம் வழியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்: 
1.திரைப்பட நல வாரிய உறுப்பினர் புத்தகத்தின் முதல் பக்கம்
2.வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் (அல்லது) காசோலை
3.நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை. இவ்வாறு தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.