28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேசம் முரளி இயக்கி நடித்துள்ள படம், கபிலவஸ்து. இதன் ஒலிநாடாவை விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு இணைந்து வெளியிட்டனர். மன்சூர் அலிகான், சிரிகாந்த் தேவா பெற்றுக்கொண்டனர். அப்போது நேசம் முரளி பேசியதாவது: இப்போது இந்தியா முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் இயங்கி வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. சேவை என்ற பெயரில், பல ஆசிரமங்களில் கொள்ளையடிக்கிறார்கள். பல ஆசிரமங்களில் வியாபாரத்தன்மை புகுந்துவிட்டது. 15 லட்சம் பேர் உள்ள நடைபாதைவாசிகளில் இருந்து சில பேரையாவது அந்த ஆசிரமங்கள் தத்தெடுக்க கூடாதா? இதுதான் படம் கேட்கும் கேள்வி என்றார். தேவலாமே! நல்ல யோசனைதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



