Show all

பொங்கல் வெளியீட்டுக்கு வரிசை கட்டுகிறது! ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி. ஆனால் எண்ணிமத்திரையில்

ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி, எண்ணிமத் திரையில் வருகிற பொங்கல் கொண்டாட்ட திருவிழா நாளில் வெளியாக உள்ளது.

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி படம் வருகிற பொங்கல் கொண்டாட்ட திருவிழா நாளில் வெளியாக உள்ளது.
 
ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு கதைத்தலைவியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முதன்மைக் வேடங்களில் வருகிறார்கள்.  

இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார். பூமி படத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தை வருகிற பொங்கல் திருவிழா நாளில் நேரடியாக எண்ணிமத்திரையில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது. இதேபோல் மாதவனின் மாறா, விசாலின் சக்ரா போன்ற படங்களும் பொங்கலுக்கு எண்ணிமத்திரையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.