Show all

எண்ணிமத் தளத்தில் நுங்கம்பாக்கம்! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம்

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம், நேரடியாக எண்ணிமத் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம் நேரடியாக எண்ணிமத்தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளது 10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5118 (24.06.2016) அன்று சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாளில் புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார கம்பியைக் கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 
இந்த நிலையில் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு தமிழில் ‘நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படம் தயாரானது. ‘உளவுத்துறை’ மற்றும் ‘ஜனனம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் இரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் முழுமையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகிவிட்டாலும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டச்சிக்கல் காரணமாகவும் இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அரசியல் மற்றும் சட்டப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை அடுத்த மாதம் எண்ணிமத் தளத்தில் வெளியீடு செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.