மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்ப் புத்தாண்டு வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாயத் தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். கட்டாயத் தேவைகளுக்காக கூட நாங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமலிருக்க, இராமாயணம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஏராளமான மக்கள் கோரிக்கை விடத்தொடங்கி விட்டனராம். மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஞாயிறு காலை தூர்தர்ஷனில் இராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்தக் காலகட்டத்தில், இந்த தொடர் ஒளிபரப்பாகும் நாட்களில் மக்கள் நடமாட்டம் சாலைகள் வெறிச்சோடி காணப்படுமாம். சில வீடுகளில் மட்டுமே அப்போது தொலைக்காட்சி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியுமாம். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தார்களாம். இந்நிலையில், நாளை முதல் அன்றாடம் இரு முறை தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக நடுவண் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட கீச்சுப் பதிவில், மக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் இராமாயணம் தொடர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். தமிழக மக்கள் தமிழக அரசு கொடுக்கப் போகிற ரூ1000 தொகையைக்கூட வங்க மறந்து, இராமயணம் மகாபாரத்தில் மூழ்கப்போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



