பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியில் சென்றவுடன்- போட்டியாளர்களால் இமயத்தை வில்லாக வளைக்க முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும், எதிர்பாரததை எதிர் பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என்பார் கமல். 27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியில் சென்றவுடன்- போட்டியாளர்களால் இமயத்தை வில்லாக வளைக்க முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும், எதிர்பாரததை எதிர் பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என்பார் கமல். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அந்த நூறு நாளில் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். நிகழ்ச்சி தயாரிப்பாளர்களோ மிக மிக கேவலமான காட்சிகளையே விளம்பரக்; காணொளியாகக் காட்டி மகிழ்ச்சி அடைவார்கள். பிக்பாஸ் பருவம் மூன்று, இரண்டு பருவங்களை விட தண்டமோ தண்டம்;. தங்கள் சொந்தக் கதையைச் சொல்லுகிற போது மற்ற போட்டியாளர்கள் உருகி மருகி அழுவார்கள். அப்புறம் ஒருவருக்கொருவர் குழி தோண்டிக் கொண்டிருப்பார்கள். சாண்டி, கவின், செரின் இவர்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வேறு நிகழ்ச்சிகளில்; பார்த்தால் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் நமக்கு ஏற்படுத்திய கடுப்புதான் முந்தி, முந்தி வந்து நிற்கிறது. “கர்நாடகாகாரன் கவிரியில் தண்ணீர் விட மறுக்கிறன்” என்கிற ஒற்றை வரியை தாங்கிக் கொள்ள, அங்கீகரிக்க முடியாத செரின், விணாய்ப்போன பையன்கள் அணி, கமல், பிக்பாஸ். என்னே கொடுமை. சரி செய்திக்கு வருவோம். பிக்பாஸ் தனக்கு பெரிய விளம்பரம் எல்லாம் பெற்றுத் தருகிறது என்று பீற்றிக் கொண்ட கமலால் உள்ளாட்சி தேர்தலில் நிற்க கூட தெம்பு இல்லாமல் துவண்டு போனவராக ஏதேதோ காரணம் சொல்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களால் மிகவும் உயரமாக எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் மக்களிடையே மிகவும் பரிதாபமாகப் பார்க்கப்பட்டவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு ஒரு செய்தி தொலைக்காட்சி கண்மடையில் செய்தி வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதில், முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது. மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,365.
தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு தொலைக்காட்சியில் மிகவும் புகழப்பட்டவர் என்பதான விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளதாக- தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார் இலாஸ்லியா.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



