Show all

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் கவின் என்று தெரிகிறது! ஐந்து இலட்சத்தை எடுத்துக் கொண்டு.

பிக்பாஸ் விளம்பரக் காணொளியில், பிக்பாஸ் வழங்கும் ஐந்து இலட்சத்தை எடுத்துக் கொண்டு. கவின் வெளியேறுவார் என்று சூசகமாக அறிந்து கொள்ள முடிகிறது. 

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறீர்களா என்ற பிக்பாசின் கேள்விக்கு கவின் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அதை விளம்பரக் காணொளியிலும் சூசகமாக தெரிவிக்கின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முகென் ராவ் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் அனைவரும் இந்தக் கிழமை வெளியேற்றத்திற்குப் பட்டியல்; இடப் பட்டுள்ளனர். இதனால் இந்தமுறை பிக்பாஸ் தலைப்பை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வெளியேற்ற, நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. அதில், முதலாவதாக ரூ.5 லட்சம் ரூபாயை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த நிகழ்ச்சிக் குழுவினர் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

பிக்பாசின் இந்தக் கேள்விக்கு நடிகர் கவின் சம்மதம் தெரிவிக்கிறார். சாண்டி, லாஸ்லியா கவினிடம் வெளியே செல்ல வேண்டாம் என்கின்றனர். ஆனால் கடந்த சில கிழமைகளாக அதிகமான வேலைப்போட்டிகளில் வெற்றி பெறாத கவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.