விஜய் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவிருக்கும் முதல் நபர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது பார்வையாளர்களிடம் நேற்றிலிருந்தே. 17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்தக் கிழமை வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்க 7 போட்டியாளர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. பார்வையாளர்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற உள்ள நபரை பிக்பாஸ் தீர்மானிப்பார். கடந்த முறைகளில் கூகுள் தேடலிலேயே பார்வையாளர்கள் வாக்களிக்க முடியும். இந்தமுறையோ ஹாட்ஸ்டாரில் மட்டுமே வாக்களிக்கும் வகையான ஒரு விளம்பர யுக்தியைக் கையாண்டிருக்கிறது விஜய் தொலைக்காட்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, சேரன், செரின், மோகன் வைத்யா, தர்சன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா, மீரா மிதுன் ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி, தங்களது வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சோகத்தை பகிர்ந்து கொள்ள, ஒரே அழுகைப் படலமாக கடந்த கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்தது. இரண்டாவது கிழமையில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கான வெளியேற்றப் படலம் முடிந்து பார்வையாளர்கள் வாக்குகள் அடிப்படையில், ஒருவரை வெளியேற்ற எழுவர் கொண்ட ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில், சேரன், மீரா மிதுன், பாத்திமா பாபு, கவின், சாக்ஷி, சரவணன், மதுமிதா, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதிப்பீடு அளிக்கும் போட்டியாளர்களை கடைசி வரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற மாட்டார்கள் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனத்தை பொருத்திப்பார்த்தால், பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகளை சுற்றி வலம் வரும் மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வாய்ப்புகள் குறைவு என்பது தெரிய வருகிறது. அதேபோல் பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக அறியப்படும் கவினை வெளியேற்ற வாய்ப்பில்லை என்றே பெரும்பான்மை வலைதள பதிவுகள் தெரிவிக்கின்றன. சரவணன், சாக்ஷி இருவரில் சரவணனின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை அவ்வளவாக கவரவில்லை. இந்த எழுவரில் பாத்திமா பாபு, வீட்டில் நடக்கும் பிரச்னைகளில் அதிகம் தலையிடுவதில்லை. எனவே சரவணன், பாத்திமா பாபு இருவரில் ஒருவர் இந்த கிழமை வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,201.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



