Show all

வனிதா மீது முன்னால் கணவர் புகார்! பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் வனிதா கைதாவதற்கு வாய்ப்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதா, வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை  தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளாராம்.

ஆனந்த் ராஜ் உடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அதிகாரி மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் சென்னைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப் படுகிறது. 
வனிதாவின், விவாகரத்து பெற்ற கணவர் ஆனந்த் ராஜ் காவல் துறையில் அளித்துள்ள புகரில் தெரிவிப்பதாவது: 
தனக்கும் வனிதாவிற்கும் பிறந்த குழந்தையான ஜெனிதாவை சரிவர கவனித்துக்கொள்ளாமல் வெளியில் விட்டுவிட்டு அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார். நான் அங்கே சென்று அவரிடம் முறையிட வேண்டும். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கொடுங்கள். என் மகளை நானே பார்த்துக்கொள்கிறேன். மகளை வெளியில் விட்டுவிட்டு  நிகழ்ச்சி தேவையா? எனவே வனிதா மீது புகார் கொடுத்து உள்ளேன். எனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேச வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வனிதா தரப்பு வழக்கறிஞர் சிறிதர் இது குறித்து தெரிவிக்கும் போது: 
கைது ஆணை இருந்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியும். புகார் கொடுத்து விட்டால் போதாது. அதற்கான அழைப்பாணை அனுப்பட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். வனிதாவை கைது செய்ய வேண்டிய தேவை எழாது என்று தெரிவிக்கிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,201.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.