எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்க அணியமாக இல்லை. அதனால் நிறைய கட்சிகளுக்கு இந்த அணியில் இடம் இல்லாத நிலையில்- மூன்றாவது அணியே தீர்வு என்று அரசியல் பார்வையாளர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. 12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிவரும் பருவம் நான்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தக் கிழமை வெளியேறும் போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் நிறைவு பெற இன்னும் இரண்டு அல்லது மூன்று கிழமைகளே உள்ளது. நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் ஒவ்வொரு கிழமையும் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த பருவத்தில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிசா மற்றும் அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த கிழமை மிகக் குறைவான வாக்குகள் பெற்றதால் அனிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் அனிதா. இவர் சூர்யாவின் காப்பான், ரஜினியின் எந்திரன் 2.0 போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



