தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம்ரவி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் இன்று. 12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம்ரவி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த மணித்துளிகள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் பருவத்தில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 84 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த மூன்று பருவங்களில் இடையிடையே படங்களின் முன்னோட்டத்திற்காக நடிகர், நடிகைகள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பேரூக்கமுயற்சி நோக்கில் வரும் நடிகர், நடிகைளைப் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலிடம் வந்து உரையாடி விட்டு செல்கின்றனர். ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தின் தலைப்பு விளம்பரக் காணொளியை வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் ஜெயம்ரவி ‘பூமி’ படத்தின் பேரூக்கமுயற்சி (புரமோசன்) காணொளி வெளியீட்டிற்காகச் சென்றுள்ளார். ஜெயம் ரவியை அகம்தொலைக்காட்சி வழியே பார்த்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் வருகிற பொங்கல் திருநாளன்று நேரடியாக எண்ணிமத் திரையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



