Show all

திருமணத்திற்குத் தாமதிக்கும் பேரறிமுக நடிகை அனுஷ்கா! காரணம் என்னவாம்

பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை அனுஷ்கா.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பேரறிமுகமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார்.

நடிகை அனுஷ்காவுக்கு தற்போது அகவை 38 ஆகிறதாம். திருமண அகவைத் தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு:

திருமணத்தின் மீது எனக்கு விருப்பம் உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமணத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் தேவலாம். அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன். 

பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். பெற்றோர் எனக்கு 20 அகவை நிரம்பியதில் இருந்தே திருமணம் செய்துகொள் என்று நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இப்போது அதுபோல் நிர்ப்பந்திப்பதை நிறுத்தி விட்டனர். எனக்கும் திரைப்படத்தில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.