Show all

பாராட்டா, குற்றச்சாட்டா! தன் கணவரோடு கதைத்தலைவியாக நடிக்கும் சாய்பல்லவி மீது, சமந்தா முன்வைப்பது

இந்த படத்தில் நாகசைதன்யாவை விட சாய்பல்லவி தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் சமந்தா. பாராட்டுகிறாரா. 

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பேரறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான பின்தான் தமிழுக்கு வந்தார். தமிழில் சாய்பல்லவி நடித்த கரு, மாரி 2, என்ஜிகே ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.

அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளன. பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா கதைத்தலைவியாக, லவ் ஸ்டோரி படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.

இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள் படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.

இயக்குனரும் எடுத்தவரையில் தொகுப்பு செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த நடிகை சமந்தா, இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.