17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தன் குடும்பத்தை நாசமாக்கிவிட்டதாக தாடி பாலாஜி குற்றஞ் சாட்டுகிறார். முன்னதாக தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர்: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். அவரை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தயார். ஆனால் நித்யா என் மகளை பார்க்க அனுமதிப்பது இல்லை. மேலும் தேர்தலில் நிற்பேன் என்கிறார் நித்யா. முதலில் அவர் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும், இல்லை அரசியலை பற்றி தான் அவருக்கு என்ன தெரியும். நித்யாவின் வளர்ச்சியை பார்த்து நான் பொறாமைப்பட அவர் என்ன முதல்வர் வேட்பாளராகவா அறிவிக்கப்பட்டுள்ளார். நித்யா என் வேலை காரணமாக நான் நேரம் இல்லாமல் இயங்கிக் கொண்டு இருப்பதால், கிடைத்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். அது ஏன் என்று நான் கேட்பதில் என்ன தவறு. நித்யாவால் பெண்கள் அமைப்புக்கு கேவலம். நித்யாவின் பின்னால் இருப்பது மனோஜ் தான். நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நான் நேராக என் அம்மா வீட்டிற்கு சென்றேன். நித்யாவை பார்க்கவில்லை. அவர் பொய் பேசுகிறார். பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் வாழ்வில் நடப்பது பற்றி கமல் அவர்களுக்குத் தெரியும். கமல் அவர்களிடம் கூறிவிட்டு தான் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தேன் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். நித்;தியாவிற்கு சுதந்திரமாக இருந்து பழகி விட்டது என்பதும், தாடி பாலஜிக்கு அளவுக்கு அதிகமான சந்தேக புத்தி இருப்பதாகவும் நடுவில் நிற்பவர்கள் சொல்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.