Show all

விசால், சமந்தா அசத்தலில்! எப்படியிருக்கிறது நேற்று வெளியான இரும்புத்திரை

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரும்புத்திரை தமிழ்த் திரைப்படம் நேற்று வெளியானது. நடிகர் விசால் நடித்து நேற்று வெளியான இரும்புத்திரை படத்தில் சமந்தா, அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ஆதார் தகவல் திருட்டு, நடுவண் அரசின் எண்ணிம இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே இதனை நீக்கக்கோரி பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகள் சென்னை காசி திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், விசால் வீட்டை முற்றுகை இடப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் விசால் வீட்டிற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் இரும்புத்திரை படத்தில் திட்டமிட்டு விமர்சித்து எந்த கருத்தும் சொல்லப்படவில்லை என்று விசால் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

'வருங்காலத்தில் நடக்கவிருக்கும், தற்போது நடந்துவரும் சமூக பிரச்சனைகள் குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். யாரையும் திட்டமிட்டு விமர்சித்து படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால் நான் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை' என்று கூறினார்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பழைய இருப்புத்திரை போலவே நன்றாகவே வந்துள்ளதாம். திரையரங்கிற்கு சென்று பார்ப்போமா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.