30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்iiயில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா ஹிந்துத்வா கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு ஹிந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாராம். ஆனால் காவல் துறையினர், மக்களிடம் மதிப்பு மிக்க கலைத்துறையைச் சார்ந்த கலைத்துறையையே திருப்பிப் போட்ட மாமனிதர் மீது வேண்டாமே முகந்திரம் இல்லாத புகார் என்று சமாதானம் செய்ய முயன்றதில் திருப்தி அடையாமல், புகார்தாரர் அறங்கூற்றுமன்றம் சென்ற நிலையில் அறங்கூற்றுமன்ற உத்தவுபடி பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்துத்துவா அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற இதுபோன்ற முயற்சிகள் பயன்தரும் என்று நம்பி செயல்பட்டு வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,786.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



