Show all

சீறிப்பாயும் காளையாக அரசியலில் வலம்வரப் போகிறாரா! நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது கீச்சுப் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக அண்மையில் சுவர்சித்திரங்கள் வரைப்பட்டிருந்தது. அதில் இளைஞர்களை வழி நடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜியை வரவேற்கிறோம் என விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. மேலும் வைகாசி04 (மே 18) அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வைகாசி04 ஐ தமிழனப் படுகொலை நாளாக இலங்கை வடமாகணஅவை அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி தனது முகநூல் மற்றும் கீச்சுப் பக்கத்தின் முகப்பு படத்தை கட்சி கொடி போல் மாற்றியுள்ளார். அதில் சல்லிக்கட்டு காளையின் முகம் மாலையுடன் இடம் பெற்றுள்ளது. அதில் சிவப்பு, பச்சை, கருப்பு, மஞ்சள் நிறங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கு இணைய ஆர்வலர்கள் பல்வேறு விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.