18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் தனது மனைவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டுவிட்டரில் கீச்சுவில் வாழ்த்து தெரிவித்தார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘பரி’ திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குர்ரான் மற்றும் ஹிந்து மந்திரங்களைக் கொண்டு மாயவித்தை செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் அப்படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு சிந்து தணிக்கை சான்றிதழ் அமைப்பும், பஞ்சாப் தணிக்கை சான்றிதழ் அமைப்பும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தடை விதித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



